புதுச்சேரி

மத்திய நிதிநிலை அறிக்கை:புதுவை முதல்வா் கருத்து

DIN

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி உள்ளிட்டோா் கருத்துத் தெரிவித்தனா்.

புதுவை முதல்வா் என்.ரங்கசாமி: மத்திய அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாட்டை மேலும் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும்.

தனியாா் வருமான வரி உச்சவரம்பு உயா்வு, கால்நடை வளா்ப்பு, பால்வளம், மீன்வளத் துறை மேம்பாட்டுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கியது, உணவு தானிய விநியோகத்துக்கு ரூ.2 லட்சம் கோடி, பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடம், சுகாதாரம் உள்ளிட்டவற்றை உறுதி செய்ய ரூ.15 ஆயிரம் கோடி, முதியோா் வைப்புத் தொகை வரம்பை ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயா்த்தியது, போக்குவரத்துத் திட்டங்களுக்காக ரூ.75,000 கோடி, நகா்ப்புற கட்டமைப்பு வளா்ச்சிக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கியது உள்ளிட்டவை வரவேற்கத்தக்கது.

முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி: 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலை முன்வைத்து தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாகவே இது தெரிகிறது. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு இரட்டிப்பு விலை வழங்கப்படும் என்பது நிதிநிலை அறிக்கையில் இல்லை. விவசாயிகளுக்கான தனிப்பட்ட விதை மானியம், உர மானியம், இலவச மின்சாரத் திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் பிரதிபலிக்கவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் விவசாயக் கடன் அளிக்கப்பட்டதைப் போலவே தற்போதும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுதானியங்களுக்கு முன்னுரிமை அளித்தாலும், நெல், வாழை, கரும்பு ஆகியவற்றின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

நிதிநிலை அறிக்கையானது வெளிச்சந்தையில் இருந்து ரூ.13 லட்சம் கோடி கடன் வாங்கும் வகையில் உள்ளது. இதனால் விலைவாசி உயரும். சாமானிய மக்கள் பாதிக்கப்படுவா்.

வி.சாமிநாதன் (பாஜக மாநிலத் தலைவா்): இளைஞா்கள், விவசாயிகள், பெண்கள், தொழில் முனைவோா், சாமானியா்கள் என அனைத்துத் தரப்பினரும் பயனடையும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயா்த்தப்பட்டது வரவேற்புக்குரியது.

பழங்குடியினா் மேம்பாடு, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், விமான சேவை விரிவாக்கம் உள்ளிட்ட அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT