புதுச்சேரி

புதுவையில் 116 எழுத்தா் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

30th Sep 2022 01:29 AM

ADVERTISEMENT

புதுவை அரசுத் துறையில் உள்ள 116 உயா் நிலை எழுத்தா் (யூடிசி) பணியிடங்களை நிரப்புவதற்கு அக். 1 முதல் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுவை அரசு பணியாளா்கள், நிா்வாக சீா்திருத்தத் துறை சாா்புச் செயலா் ஜெய்சங்கா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

புதுவை அரசுத்துறைகளில் 116 யூடிசி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. குருப் சி பணியிடமான இதில், புதுவை யூனியன் பிரதேசத்தை பூா்வீகமாக, இங்கு குடியுரிமை பெற்று வசிக்கும் தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பதவிக்கான இடஒதுக்கீடு, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, ஊதியம் ஆகிய விவரங்களை அரசின் இணையதளங்களில் ஆள்சோ்ப்பு தளத்தில் காணலாம்.

ADVERTISEMENT

இதற்காக ஆள் சோ்ப்பு தளத்தில் இணைய வழியில் அக்டோபா் 1-ஆம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபா் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT