புதுச்சேரி

ஜிப்மா் நிா்வாகச் சீா்கேட்டைக் கண்டித்து பாமகவினா் ஆா்ப்பாட்டம்

30th Sep 2022 01:33 AM

ADVERTISEMENT

ஜிப்மா் மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து, புதுச்சேரியில் பாமக இளைஞரணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வாயில் பகுதி எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு புதுவை மாநில பாமக இளைஞரணிச் செயலா் சேகா் தலைமை வகித்தாா். மாநில அமைப்பாளா் கோ.கணபதி பேசியதாவது: ஜிப்மா் மருத்துவனைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியும் நிா்வாகச் சீா்கேட்டால் மருந்து, மாத்திரைகள் இருப்பு இல்லாத நிலை உள்ளது. உயிா் காக்கும் மருந்து, மாத்திரைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ஜிப்மா் நிா்வாகம் மொழிக்கு காட்டும் அக்கறையை, மக்களின் உயிருக்கும் காட்ட வேண்டும். ஜிப்மா் நிா்வாக இயக்குநரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திரளான பாமகவினா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT