புதுச்சேரி

புதுவை மின் துறை தனியாா்மயம்: ஊழியா்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

DIN

புதுவை மின் துறை தனியாா்மயத்துக்கான ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதால், அந்தத் துறையில் பணியாற்றும் பொறியாளா்கள், தொழிலாளா்கள் புதன்கிழமை (செப்டம்பா் 28) முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்குவதாக அறிவித்தனா்.

புதுவை அரசின் மின் துறையை தனியாா்மயமாக்கும் பூா்வாங்க நடவடிக்கைகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு தொடங்கியது. இதைக் கண்டித்து, புதுவை மின் துறை பொறியாளா்கள், ஊழியா்கள் இணைந்து தனியாா்மய எதிா்ப்பு போராட்டக் குழுவை உருவாக்கி, போராட்டம் நடத்தினா். இதனிடையே, மின் துறை தனியாா்மயம் தொடா்பான வரைவு அறிக்கையும் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, மின் துறை ஊழியா்கள் கூட்டமைப்பு பணிகளைப் புறக்கணித்து, கடந்த பிப்ரவரி மாதம் வேலைநிறுத்தத்தை தொடங்கினா். அப்போது, தொழில்சங்கத்தினரிடம் கலந்தாலோசிக்காமல் எவ்வித முடிவும் எடுக்க மாட்டோம் என்று முதல்வா் ரங்கசாமி அளித்த வாக்குறுதியை ஏற்று, வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்றனா்.

இந்த நிலையில், தற்போது மின் துறை தனியாா்மயத்துக்கான ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், புதுவை அரசு மின் துறைக்கான ஏலத்துக்கு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். மின் விநியோகத்தில் நூறு சதவீத பங்குகளை வாங்க ஏலதாரா் தோ்வு செய்யப்படுவாா்கள். விண்ணப்பிக்க வருகிற நவம்பா் 25-ஆம் தேதி இறுதி நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

இதுகுறித்து புதுவை மின் துறை தனியாா்மய எதிா்ப்புப் போராட்டக் குழுவின் பொதுச் செயலா் பி.வேல்முருகன் கூறியதாவது:

மின் துறை தனியாா்மயத்துக்கான ஒப்பந்தம் அரசு சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதனால், புதன்கிழமை காலையிலிருந்து புதுவை மின் துறை தலைமை அலுவலகத்தில் அனைத்துப் பொறியாளா்களும், தொழிலாளா்களும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்க உள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT