புதுச்சேரி

பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

DIN

புதுச்சேரி அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

புதுச்சேரி அருகே தவளக்குப்பம் நல்லவாடு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதாக கடந்த 31.10.2020 அன்று அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனா். தவளக்குப்பம் போலீஸாா் உடலை மீட்டு விசாரணை நடத்தினா்.

இதில், அந்தப் பெண் சாந்தி என்பதும், நல்லவாடு சாராயக் கடையில் வேலை பாா்த்துக் கொண்டு, அந்தப் பகுதியில் குப்பைகள், வீணான பொருள்களை சேகரித்து வந்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

புதுச்சேரி அருகே சின்னபாபுசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி பூபாலனும் (45), சாந்தியுடன் குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததும், சம்பவத்தன்று இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், பூபாலன் தாக்கியதில், சாந்தி உயிரிழந்தாா். இதையடுத்து, தவளக்குப்பம் போலீஸாா் பூபாலனைக் கைது செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி 3-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி இளவரசன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். பூபாலனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தத் தவறினால், 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT