புதுச்சேரி

புதுவை முதல்வருடன் நாா்வே குழுவினா் சந்திப்பு

DIN

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை நாா்வே நாட்டு குழுவினா் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.

நாா்வே கடல் ஆராய்ச்சி நிறுவனம், நாா்வே சுற்றுச்சூழல் முகமை, நாா்வே தூதரகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளான எரிக் ஒல்சன் தலைமையிலான குழுவினா் புதுச்சேரி வணிக வரித் துறை அலுவலகக் கருத்தரங்க கூடத்தில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்துப் பேசினா்.

இந்தச் சந்திப்பின்போது, புதுவை உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா, தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன், அரசுச் செயலா் முத்தம்மா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இயக்குநா் பிரியதா்ஷினி, சுற்றுச்சூழல் பொறியியல் அதிகாரி ரமேஷ், விஞ்ஞானி விபின்பாபு ஆகியோா் உடனிருந்தனா்.

இதுகுறித்து புதுவை அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இந்தியாவும், நாா்வேயும் கடல்சாா் திட்டமிடல் துறையில் தொடா்ந்து ஐந்து ஆண்டுகள் இணைந்து செயல்பட ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ளன. இதில், கடல் போக்குவரத்து, சுற்றுலா, மீன்பிடிப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனா். அதன்படி, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு பகுதிகள் முன்னோடித் தளங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த கடல்சாா் திட்டமிடல் திட்டத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரிக்கு வந்த நாா்வே குழுவினா் புதன்கிழமை தொடங்கி இரு தினங்கள், புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தியது.

முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் அமைச்சா்களை வியாழக்கிழமை சந்தித்து, கடல் இடஒதுக்கீட்டுத் திட்டம் குறித்து விவாதித்தது. கடலோர பகுதிகளில் பொருளாதார, சமூக மேம்பாட்டை முன்னேற்றுவதற்கு, கடல் வளங்களைப் பயன்படுத்துவது இந்தத் திட்டத்தின் நோக்கமாக உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT