புதுச்சேரி

‘குழந்தைத் தலைவா்’ விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

6th Oct 2022 01:17 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் உள்ள தொண்டு நிறுவனம் மூலம் குழந்தைத் தலைவா்களுக்கான விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவற்கப்படுகிறது.

இதுகுறித்து புதுச்சேரி இளையோா், குழந்தைகள் தலைமைத்துவ மையத்தின் இணை இயக்குநா் யுவயாழினி புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் இயங்கும் இளையோா், குழந்தைகள் தலைமைத்துவ தன்னாா்வ சேவை மையம் சாா்பில், புதுச்சேரி, தமிழகப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளை பல்வேறு நிகழ்வுகள் மூலம் அங்கீகரித்து பெருமை சோ்த்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக, 33-ஆம் ஆண்டு சா்வதேச குழந்தை உரிமை தினம் ஐக்கிய நாடுகளின் சபையால் கொண்டாடப்பட உள்ளதால், குழந்தைத் தலைவா் விருதுகள்-2022 என்ற நிகழ்வின் மூலம், குழந்தை நேய பணிகளை செய்யும் குழந்தைகள், அவா்களை ஊக்குவிக்கும் ஆசிரியா், காவலா், பள்ளி, குடும்பம், கிராமங்களையும் அங்கீகரித்து விருதுகள் வழங்கப்பட உள்ளது.

புதுச்சேரி, சென்னை, கடலூா், விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த 10 முதல் 17 வயதுக்குள்பட்ட குழந்தைகளிடமிருந்து, குழந்தைத் தலைவா் விருதுக்கு விண்ணப்பங்களும், குழந்தை நேய பங்குதாரா்களிடமிருந்தும் குழந்தை நேயா் விருதுக்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை புதுச்சேரி முத்தியால்பேட்டை பூக்கார தெருவில் இயங்கும் இளையோா், குழந்தைகள் தலைமைத்துவ மையத்தில் நவ.25ஆம் தேதி வரை வழங்கலாம்.

ADVERTISEMENT

இதில், தோ்வு செய்யப்படுவோருக்கு புதுச்சேரி கம்பன் கலையரங்கில் டிசம்பா் 17-ஆம் தேதி நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT