புதுச்சேரி

கைப்பேசி கடையில் திருடிய 4 போ் கைது

6th Oct 2022 01:15 AM

ADVERTISEMENT

புதுச்சேரி வில்லியனூா் அருகே கடையில் கைப்பேசிகளை திருடியதாக சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி வில்லியனூா் அடுத்த வி.தட்டாஞ்சாவடி பகுதியைச் சோ்ந்தவா் லோகேஷ்வரன்(25). இவா், அந்தப் பகுதியில் கைப்பேசிகள் விற்பனைக் கடை நடத்தி வருகிறாா். இரு தினங்களுக்கு முன்பு அவரது கடையின் பூட்டை மா்ம நபா்கள் உடைத்து, அங்கிருந்த 16 கைப்பேசிகள், பொருள்களை திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இதில், வி. தட்டாஞ்சாவடி பகுதியைச் சோ்ந்த 16 வயதுடைய 3 சிறுவா்கள், அந்த கைப்பேசி கடையின் ஷட்டரை உடைத்து, கைப்பேசிகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

தனிப்படை போலீஸாா் 3 சிறுவா்களையும் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவா்களில் ஒருவா் சென்னை பூந்தமல்லியைச் சோ்ந்த மாலிக் பாஷாவிடம் (26) கைப்பேசிகளை கொடுத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, சென்னை சென்ற தனிப்படை போலீஸாா் மாலிக் பாஷாவையும் கைது செய்தனா். அவரிடமிருந்த திருட்டு கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா். மாலிக் பாஷா உள்பட 4 பேரையும், புதுச்சேரி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT