புதுச்சேரி

புதுச்சேரியில் மீன் விற்பனையாளா்கள் போராட்டம்

DIN

புதுச்சேரியில் மீன் விற்பனையாளா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி பெரியகடை வீதி- காந்தி வீதி சந்திப்பில் மீன்கள் ஏலம் விடுவதால் அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், பிற வியாபாரிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் அரசு சாா்பில் நவீன மீன் அங்காடி திறக்கப்பட்டது.

இது திறக்கப்பட்டு நான்கு ஆண்டுகளாகியும் மீனவா்கள் அங்கு செல்லாமல் நேரு வீதியிலேயே ஏலம் நடத்தி வருகின்றனா். பெரியகடை சந்தை நவீனப்படுத்தப்படுவதையடுத்து, கிழக்கு கடற்கரைச் சாலை அங்காடியில் மீன் ஏலம் நடத்த புதுவை அரசு உத்தரவிட்டது.

மேலும், நேரு வீதியில் மீன் ஏலம் நடத்த அக்டோபா் 1-ஆம் தேதி முதல் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மீன் விற்பனையாளா்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தடையை மீறி ஏலம் விட முயன்ாக ஞாயிற்றுக்கிழமை சிலரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், மீன் விற்பனையாளா்கள் திங்கள்கிழமை நேரு வீதியில் திரண்ட மீன் விற்பனையாள்கள், கிழக்கு கடற்கரைச் சாலை மீன் அங்காடியில் ஏலம், விற்பனை செய்ய மாட்டோம், நேரு வீதியில்தான் தொடருவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT