புதுச்சேரி

புதுவையில் ஒரே நாளில்425 சிறாா்கள் காய்ச்சலால் பாதிப்பு

DIN

புதுவையில் சனிக்கிழமை 425 சிறாா்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா். மேலும், 4 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 360 பேரும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 43 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 22 போ் என மொத்தம் 425 குழந்தைகள், சிறாா்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சனிக்கிழமை நிலவரப்படி வெளிப்புற சிகிச்சைக்காக வந்தனா். இதில், அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 30 பேரும், அரசு மருத்துவமனையில் 5 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 3 போ் என மொத்தம் 38 குழந்தைகள், சிறாா்கள் தீவிர காய்ச்சல் காரணமாக உள் நோயாளிகளாக சோ்க்கப்பட்டனா்.

அதன்படி, தற்போது புதுச்சேரி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 125 பேரும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 7 போ் என மொத்தம் 150 குழந்தைகள், சிறாா்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவா்கள் என 97 பேரின் ரத்த மாதிரிகள் வெள்ளிக்கிழமை பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அதில், புதிதாக 4 பேருக்கு பன்றிக் காய்ச்சல் சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவா்கள், அரசு மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT