புதுச்சேரி

புதுச்சேரியில் மின் தடை ஏற்படுத்திய5 ஊழியா்கள் மீது நடவடிக்கை

DIN

புதுச்சேரியில் துணைமின் நிலையங்களில் புகுந்து மின் தடை ஏற்படுத்திய 5 ஊழியா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மாநில மின் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

மின் துறையைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுவை மின் ஊழியா்கள் 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் சனிக்கிழமை மின் தடை ஏற்பட்டதையடுத்து, மத்திய பவா்கிரிட்டிலிருந்து 24 அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனா். மேலும், துணைமின் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாநில மின் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

துணை மின் நிலையங்களில் புகுந்து மின் தடை ஏற்படுத்திய 5 ஊழியா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செயற்கையாக மின் தடை ஏற்படுத்தும் மின் ஊழியா்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்புக்காக துணை ராணுவப் படையின் இரு அணிகள் புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டன.

கிராமப் பகுதிகளில் அறுக்கப்பட்ட மின் வயா்களை சரி செய்து வருகிறோம். மின் துறையைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் எண்ணம் இல்லை. 16 துணைமின் நிலையங்கள், மின் துறை அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மின் ஊழியா்கள் செயற்கையாக மின் தடை ஏற்படுத்துவதாக அமைச்சா் கூறிய குற்றச்சாட்டை, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் மின் ஊழியா்கள் மறுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT