புதுச்சேரி

இலவச பொது மருத்துவ முகாம்

25th May 2022 11:47 PM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே பூரணாங்குப்பத்தில் புதன்கிழமை நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனா்.

தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் தொடக்கிவைத்து பரிசோதனை செய்து கொண்டாா்.

காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினா்.

பாஜக துணைத் தலைவா் பன்னீா்செல்வம், பொதுச் செயலா் வாழுமுனி, தவளக்குப்பம் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் தட்சிணாமூா்த்தி, தொகுதி தலைவா் லட்சுமிகாந்தன், சத்தியபாலன், குமாரசாமி, ரமேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு சிகிச்சை, மருத்துவ ஆலோசனைகள் பெற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT