புதுச்சேரி

புதுச்சேரியில் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

21st May 2022 12:43 PM

ADVERTISEMENT


புதுச்சேரியின் பிரசித்தி பெற்ற முருங்கப்பாக்கம் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

புதுச்சேரி முருங்கபாக்கத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலாவும் நடைபெற்றது.

மேலும் ஊரணி பொங்கல், சாகை வார்த்தல், பால் கஞ்சி வார்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பால், தயிர், இளநீர், தேன்,  சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதன்பிறகு பத்துநாள் பாரதம் படிக்கப்பட்டு அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திரௌபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

ADVERTISEMENT

இதன்பிறகு, முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது அம்மன் பச்சை பட்டு உடுத்தி தீமிதிக்கும் இடத்திற்கு வந்தவுடன் பக்தர்கள் தீ மிதித்தனர். இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் முருங்கப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Puducherry
ADVERTISEMENT
ADVERTISEMENT