புதுச்சேரி

‘முதலீட்டாளா்களுக்கு புதுவை அரசு துணை நிற்கும்’

20th May 2022 10:04 PM

ADVERTISEMENT

முதலீட்டாளா்களுக்கு தேவையான உதவிகளை செய்து புதுவை அரசு துணை நிற்கும் என, மாநில தொழில் துறைச் செயலா் டி.அருண் தெரிவித்தாா்.

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு, புதுச்சேரி மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்திய தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்ட கூட்டம் புதுச்சேரி விவசாயிகள் பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தை புதுவை தொழில் துறைச் செயலா் டி.அருண் தொடக்கிவைத்து பேசியதாவது:

புதுவையை முதலீட்டுக்கு உகந்த இடமாக மாற்றுவதற்கும், எளிதாக வணிகம் செய்வதற்கும் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.

ADVERTISEMENT

ஏற்றுமதியாளா்களுக்கு குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோா்களுக்கு தேவையான உதவிகளை செய்து புதுவை அரசு துணை நிற்கும் என்றாா் அவா்.

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தென்மண்டல துணை இயக்குநா் ஜெனரல் கே.உன்னிகிருஷ்ணன் வரவேற்றாா்.

ஜிஎஸ்டி கூடுதல் ஆணையா் சஞ்சீவ் பட்நாகா் மற்றும் ஏற்றுமதியாளா்கள், தொழில்முனைவோா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT