புதுச்சேரி

புதுச்சேரியில் அக்னிபத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் 

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை கண்டித்து 16 இடங்களில் காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

 மத்திய பாஜக அரசு ராணுவத்தில் தற்காலிகமாக ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வகையில், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து சத்தியாகிரக போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி மிஷின் வீதி சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி, எம்.பி. வெ. வைத்திலிங்கம் ஆகியோர்  கண்டன உரையாற்றினர்.

மாநில நிர்வாகிகள் பி.கே,தேவதாஸ், சூசைராஜ், திருமுருகன், ஜெரால்ட் உள்ளிட்ட நிர்வாகிகள், காங்கிரஸார் திரளாக கலந்து கொண்டனர். இந்த சத்தியாகிரக போராட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள நாடு முழுவதும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு அளிக்கும் அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், ராணுவத்தில் தனியார்மயத்தை முயற்சிக்கும் பாஜக அரசைக் கண்டித்தும் கோஷமிட்டனர்.

இதேபோல் புதுச்சேரி முழுவதும் 16 இடங்களில் காங்கிரஸ் சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT