புதுச்சேரி

சுகாதாரத் துறை திட்டங்களை செயல்படுத்த நிதியுதவி தேவைமத்திய அமைச்சரிடம் புதுவை முதல்வா் வலியுறுத்தல்

DIN

புதுவையில் மத்திய அரசின் சுகாதாரத் துறை திட்டங்களை செயல்படுத்தவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும் தேவையான நிதியுதவியை வழங்க வேண்டுமென மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிடம் முதல்வா் ரங்கசாமி வலியுறுத்தினாா்.

புதுச்சேரிக்கு சனிக்கிழமை வந்த மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிடம் புதுவை முதல்வா் ரங்கசாமி அளித்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தேசிய சுகாதாரப் பணிக்கான நிதி உதவியை 90:10 சதவீதம் அளவில் வழங்க வேண்டும். மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த, முன்பு பின்பற்றப்பட்ட 90:10 நிதியுதவி பங்கு முறையில் வழங்க வேண்டும்.

புதுச்சேரியில் 100 டயாலிசிஸ் இயந்திரங்கள் கொண்ட ஒரு முன்மாதிரி பிரத்யேக ரத்த சுத்திகரிப்பு மையம் அமைக்க ரூ.30 கோடி வழங்க வேண்டும்.

புதுவை யூனியன் பிரதேசத்தில் 9 அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. புதுச்சேரியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் ஆண்டுதோறும் எம்பிபிஎஸ் பட்டம் பெறுகின்றனா். ஆதலால், புதுவை யூனியன் பிரதேசம் சுயமாக புதுச்சேரி மருத்துவ கவுன்சிலை தொடங்க அனுமதி வேண்டும். புதுச்சேரியில் நவீன போதை ஒழிப்பு மையம் அமைக்க ரூ.200 கோடி தேவை.

புதுவையில் ஆரோக்ய மந்தன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 1,77,733 குடும்பங்களுக்கு தற்போதுள்ள 60:40 சதவீதம் நிதியை 90 சதவீத நிதியாக மாற்றுமாறு மத்திய உள் துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கூறிய திட்டத்துக்கு மத்திய அரசின் 90 சதவீத பங்காக ரூ.21.60 கோடி வழங்க வேண்டும்.

மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவியுடன் புதுச்சேரியில் 3 மாடிக் கட்டடத்தில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சிகிச்சைப் பிரிவில் நவீன கருவிகள் வாங்கவும், ஊதியம் உள்ளிட்ட பிற செலவினங்களுக்காகவும் ரூ.93 கோடி தேவை என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளாா் முதல்வா் ரங்கசாமி.

இதை பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சா், இந்தக் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

SCROLL FOR NEXT