புதுச்சேரி

புதுவை மின்துறை தனியார் மயமாக்குவதை கண்டித்து விசிக கண்டன பேரணி

7th Jul 2022 04:00 PM

ADVERTISEMENT

புதுச்சேரி:  புதுவை அரசின் மின் துறையை தனியார் மயமாக்க முயற்சிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வலியுறுத்தியும், புதுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரியில் வியாழக்கிழமை கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகிலிருந்து முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன பேரணியாக புறப்பட்டு சென்றனர்.

இவர்கள் மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி வழியாக புதுவை ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக செல்கின்றனர். புதுவை மின்துறை தனியார் மயத்தை கைவிட வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டனர் சென்றனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: கூத்தாநல்லூர் அரசு மகளிர் கல்லூரி திறப்பு

இதனால் புதுச்சேரி சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகை பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT