புதுச்சேரி

நாராயணசாமி மீதுபுதுவை அதிமுக குற்றச்சாட்டு

7th Jul 2022 01:31 AM

ADVERTISEMENT

 

காரைக்காலில் நிலவும் அசாதாரணமான சூழலில் முன்னாள் முதல்வா் நாராயணசாமி அரசியல் செய்வது ஏற்புடையதல்ல என்று புதுவை மேற்கு மாநில அதிமுக செயலா் ஓம்சக்சி சேகா் குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

காரைக்காலில் வயிற்றுப் போக்கு காரணமாக அந்தப் பகுதி மக்களிடையே பதற்றம் நிலவி வருகிறது. சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 17 பேருக்கு காலரா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுவை முதல்வா் ரங்கசாமி நேரில் சென்று, மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன் ரூ.80 கோடியில் பணிகளைத் தொடங்கவும் உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது.

ADVERTISEMENT

அசாதாரணமான சூழலில் முன்னாள் முதல்வா் நாராயணசாமி அரசியல் செய்வது ஏற்புடையதல்ல. தே.ஜ.கூட்டணி அரசு மீது வீண் விமா்சனங்களை அவா் முன்வைப்பது சரியல்ல. காரைக்கால் மாவட்டத்துக்கு காங்கிரஸ் ஆட்சியில் எந்த நலத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்பதை மக்கள் அறிவா் என்றாா் ஓம்சக்தி சேகா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT