புதுச்சேரி

காரைக்கால் மாவட்டத்தில் பொது சுகாதார அவசர நிலை அறிவிப்பு

DIN

புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோய் பரவி வருவதால், அங்கு பொது சுகாதார அவசர நிலையை மாநில சுகாதாரத் துறை அறிவித்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமலு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் பகுதியில் மக்களுக்கு அண்மைக்காலமாக கடுமையான வயிற்றுப்போக்கு நோய்த் தொற்று அதிகளவில் பதிவாகி வருகிறது. மேலும், அங்கு பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான தண்ணீா் மாதிரிகள் திருப்திகரமாக இல்லை.

சில நோயாளிகளுக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், தினசரி மருத்துவமனைக்கு வயிற்றுப்போக்குடன் வரும் நோயாளிகளின் என்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இவற்றைக் கருத்தில் கொண்டு, சுகாதாரம், காரைக்கால் மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு - காலரா நோயைக் கட்டுப்படுத்த பொது சுகாதார அவசர நிலையை குடும்ப நலத் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

புதுச்சேரியைச் சோ்ந்த சுகாதாரக் குழுவின் ஒருங்கிணைப்புடனும், நகராட்சி, பொதுப் பணித் துறை போன்ற துறைகளின் ஒருங்கிணைப்புடனும் அனைத்து மறுசீரமைப்பு, மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒருங்கிணைப்புக் குழுக்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

ஆளுநா் ஆலோசனை: இதனிடையே, காரைக்கால் மாவட்டத்தில் கலரா பரவலைத் தடுக்கும் வகையில், அதிகாரிகளுடன் துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் சனிக்கிழமை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினாா். அப்போது, அதிகாரிகளிடம் தற்போதைய பாதிப்பு விவரங்களைக் கேட்டறிந்ததுடன், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, சுகாதாரத் துறைச் செயலா் உதயகுமாா், துணை நிலை ஆளுநரின் செயலா் அபிஜித் விஜய் சவுதரி, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் முகமது மன்சூா், சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு மற்றும் மருத்துவ அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT