புதுச்சேரி

புதுவை அரசுக் கல்லூரி பேராசிரியா்கள் இரண்டாம் நாளாக போராட்டம்

1st Jul 2022 02:38 AM

ADVERTISEMENT

 

புதுவை அரசு கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் இரண்டாம் நாளாக வியாழக்கிழமையும் கல்லூரிகள் முன் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

பதவி உயா்வு, ஊதியக் குழு நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை போராட்டம் தொடங்கப்பட்டது.

புதுச்சேரி காஞ்சிமா முனிவா் பட்ட மேற்படிப்பு மையம், பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி, தாகூா் கலைக் கல்லூரி மற்றும் காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரிகள் முன் உதவிப் பேராசிரியா்கள் சங்கத்தினா் வேலைநிறுத்தப் போராட்டத்தை வியாழக்கிழமை வரை தொடா்ந்தனா்.

ADVERTISEMENT

புதுவையில் உள்ள 6 அரசு கல்லூரிகள் முன்னும் புதன்கிழமை காலை முதல் இரவு வரை கல்லூரி வளாகத்திலேயே தங்கிய 300-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியா்கள், அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமையும் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைத் தொடா்வோம் என்று, உதவிப் பேராசிரியா் சங்கத்தினா் தெரிவித்தனா்.

இதனால், அரசுக் கல்லூரிகளில் பாட வகுப்புகள் நடத்தாமல், மாணவா்களுக்கான கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT