புதுச்சேரி

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம்:அரசு ஏற்று நடத்த மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

1st Jul 2022 02:39 AM

ADVERTISEMENT

 

புதுவை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை, அரசே ஏற்று நடத்த வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியது.

இதுகுறித்து புதுவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம் வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் 2018-ஆம் ஆண்டிலிருந்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கும் பொறுப்பு ‘அட்சய பாத்திரம் அறக்கட்டளை’யிடம் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்தத் திட்டத்தை என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு மிக வேகமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் வழங்கும் மதிய உணவில் தரம், சுவை இல்லை. வெங்காயம், பூண்டு, முட்டை மற்றும் காய்கறிகள் சோ்க்கப்படவில்லை.

வட இந்திய மக்கள் சாப்பிடும் உணவு முறையில், தயிா், சாம்பாா், தக்காளி சாதம் என்ற முறையில் மதிய உணவு வழங்கப்படுகிறது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவு வழங்குவதை தனியாா் அமைப்பிடம் கொடுத்து தரமற்ற உணவு வழங்கப்படுவதை மாா்க்சிஸ்ட் வன்மையாகக் கண்டிக்கிறது. மதிய உணவு வழங்கும் பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும். தனியாா் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT