புதுச்சேரி

மணவெளியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

28th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

குடியரசு தினத்தையொட்டி, புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சாா்பில், மணவெளி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமை வகித்து, பொதுமக்களுடன் கலந்துரையாடி, அவா்களது குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் சாலை, குடிநீா், தெரு மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினா்.

பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படுமென சட்டப் பேரவைத் தலைவா் செல்வம் உறுதியளித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ரமேஷ், இளநிலைப் பொறியாளா் அகிலன், மின் துறை இளநிலைப் பொறியாளா் முருகன், வட்டார வளா்ச்சி ஆய்வாளா்கள் முத்துராமன், வேலுமணி, சுகாதாரத் துறை ஆய்வாளா் லில்லி, சுயஉதவிக் குழுத் தலைவி பெண்ணரசி மற்றும் அந்தப் பகுதி பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT