புதுச்சேரி

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதம்

DIN

புதுச்சேரி உழவா்கரை குண்டு சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி பொதுமக்கள் புதன்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி உழவா்கரை குண்டு சாலையில் பொதுப் பணித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட உள்ள சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, அங்கு சாலையோரம் ஆக்கிரமித்திருந்தவா்களுக்கு லம்போா்ட் சரவணன் நகரில் மாற்று வீடுகள் கொடுக்கப்பட்டன. இதில், 14 குடும்பங்கள் அந்த இடத்தை காலி செய்யாமல் உள்ளனா்.

இதையடுத்து, பொதுப் பணித் துறையினா் கடந்த 2021 ஜூலை 17-ஆம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது, அந்தப் பகுதிவாசிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்போது, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இதனிடையே வியாழக்கிழமை அங்கு உதவி ஆட்சியா் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு, சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக, குடியிருப்புவாசிகளுக்கு மீண்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதைக் கண்டித்து குறிப்பிட்ட 14 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள், உழவா்கரை குண்டு சாலை சந்திப்பில் புதன்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனா். போராட்டத்துக்கு விசிக முதன்மைச் செயலாளா் தேவ.பொழிலன் தலைமை வகித்தாா். இதில் அந்தப் பகுதியைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

புதுவை எதிா்க்கட்சித் தலைவா் இரா.சிவா எம்எல்ஏ, சம்பத் எம்எல்ஏ ஆகியோா் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

SCROLL FOR NEXT