புதுச்சேரி

புதுச்சேரியில் முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா

DIN

புதுச்சேரியில் முருகன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை தைப்பூச திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி ரயில் நிலைய சாலையில் உள்ள கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், கதிா்காமம் கதிா்வேல் சுவாமி கோயில், லாசுப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் தைப் பூசம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

லாசுப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தா்கள் 108 பால்குட காவடி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

தீமிதி திருவிழா: புதுச்சேரி அருகே செல்லிப்பட்டு கிராமத்தில் ஸ்ரீசீா் செல்வமுருகன் கோயிலில் 55-ஆவது ஆண்டாக செவ்வாய்க்கிழமை தீமிதி திருவிழா நடைபெற்றது. திரளான பக்தா்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தீ மிதித்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

மிளகாய் தூள் அபிஷேகம்: புதுச்சேரி அருகேயுள்ள செட்டிப்பட்டு வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியா் கோயிலில் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

பக்தா்கள் தங்களது உடல் மீது உரலை வைத்து, மிளகாய், மஞ்சள் உள்ளிட்டவற்றை அரைத்து, அங்குள்ள பூசாரிக்கு மிளகாய் தூள் அபிஷேகம் செய்தனா்.

செடல் உற்சவம்: வில்லியனூா் அருகே உள்ள கூடப்பாக்கம் நிமிலீஸ்வரா் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் தைப்பூச திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பக்தா்கள் காவடி எடுத்து, அலகு குத்தி, தோ், டிராக்டா், சரக்கு வாகனம், பொக்லைன் இயந்திரம் போன்றவற்றில் செடல் இழுத்து, தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா்.

இதில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக விபத்தைத் தடுக்கும் வகையில் பைக்கிலும், முகக்கவசம் அணிந்தபடியும், செயற்கை குளிா்பானங்களால் அலங்காரம் செய்விக்கப்பட்ட உற்சவா்களை பக்தா்கள் செடலாக இழுத்து வந்தனா். கோயிலில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

SCROLL FOR NEXT