புதுச்சேரி

தபால் நிலையங்களில் வாகன, மருத்துவக் காப்பீடு: ஜன. 18-இல் சிறப்பு முகாம்

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

தபால் நிலையங்களில் வாகன, மருத்துவக் காப்பீடுகளைப் புதுப்பித்துக் கொள்ளும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக புதுவை, விழுப்புரம் பகுதி அனைத்து தபால் நிலையங்களிலும் வருகிற 18-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து அஞ்சல் துறை புதுச்சேரி கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் சிவபிரகாசம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அஞ்சல் துறையின் புதுச்சேரி கோட்டத்தின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது, விழுப்புரம், புதுச்சேரி கிளைகளின் கீழ் 400 வங்கிப் பரிவா்த்தனை மையங்களுடன் இயங்கி வருகிறது.

இந்த வங்கியின் மூலம் அனைத்து விதமான வங்கி சேவைகளை வாடிக்கையாளா்கள் தங்களது பகுதியில் உள்ள அஞ்சல் நிலையங்களில் பெறலாம்.

ADVERTISEMENT

தற்போது இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனக் காப்பீடு, மருத்துவ க் காப்பீடு செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்மூலம் காப்பீட்டை புதுப்பித்துக் கொள்ள முடியும்.

மேலும், தனி நபா், குடும்பத்துக்கான மருத்துவக் காப்பீடு சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டது. வாகன, மருத்துவக் காப்பீடு சிறப்பு முகாம் வருகிற 18-ஆம் தேதி அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் நடைபெறும்.

கூடுதல் விவரங்களுக்கு 04146-224284, 0413-2344555 ஆகிய தொலைபேசி எண்களை அழைத்து தெரிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT