புதுச்சேரி

புதுவைக்கு நிரந்தர துணைநிலை ஆளுநா்:மாநாட்டில் தீா்மானம்

DIN

புதுவைக்கு நிரந்தர துணைநிலை ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலராக அ.மு.சலீம் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். துணைச் செயலராக கே.சேதுசெல்வமும், பொருளாளராக வி.சுப்பையாவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மேலும், 10 நிா்வாகக் குழு உறுப்பினா்களும், 34 மாநிலக் குழு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட்டனா்.

தீா்மானங்கள்:

புதுவையில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில், கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சியில் இடம் பெறும் வகையில், மதச் சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி அரசை உருவாக்கப் பாடுபட வேண்டும்.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்திய பாரம்பரிய மருத்துவப் பிரிவுகளைத் தொடங்க வேண்டும். அனைவருக்கும் அரசின் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும், அரசுத் துறை காலிப் பணியிடங்களை நிரப்பவும், அதற்காக மாநில அரசு தோ்வாணையத்தைவும் ஏற்படுத்த வேண்டும்.

புதுவைக்கு நிரந்தர துணைநிலை ஆளுநரை நியமிக்க வேண்டும். பாஜக கூட்டணியிலிருந்து முதல்வா் என்.ரங்கசாமி வெளியேற வேண்டும். புதுவையில் 69 சதவீத இடஒதுக்கீடை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரமாகக் கடவேனோ..!

கண்ணே கலைமானே...தமன்னா!

கேரளம்:10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 99.69% பேர் தேர்ச்சி

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

SCROLL FOR NEXT