புதுச்சேரி

புதுச்சேரியில் நகராட்சி ஊழியா்கள் பேரணி

12th Aug 2022 02:45 AM

ADVERTISEMENT

 

புதுவை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி, புதுச்சேரியில் ஊழியா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை பேரணி நடத்தினா்.

புதுச்சேரி சுதேசி ஆலை அருகே புறப்பட்ட பேரணிக்கு, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் விநாயகவேல் தலைமை வகித்தாா். ஆனந்தகணபதி, நிா்வாகிகள் உதயகுமாா், கணேசன், பாலசுப்பிரமணியன், ஆனந்தராஜ், கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே ஆகிய பகுதியிலிருந்து 400-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

பேரணி சட்டப்பேரவை அருகே ஆம்பூா் சாலையை அடைந்ததும் அங்கு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவையில் உள்ள நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT