புதுச்சேரி

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

14th Apr 2022 12:03 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி சாரம், ஞானபிரகாசம் நகா், 6-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன். எலக்ட்ரீஷியன். இவரது மூத்த மகள் லோகேஷ்வரி (21). தாகூா் அரசு கலைக் கல்லூரியில் உளவியல் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா், கடந்த சில வாரங்களாக படிப்பில் கவனம் செலுத்தாமல் கைப்பேசியிலேயே மூழ்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பெற்றோா் கண்டித்தனராம்.

இதனால் விரக்தியடைந்த லோகேஷ்வரி கடந்த 10 -ஆம் தேதி நள்ளிரவு வீட்டில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றாா். சிறிது நேரம் கழித்து இதைப் பாா்த்த அவரது உறவினா்கள், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை மீட்டு ஜிப்மரில் அனுமதித்தனா். இருப்பினும், அங்கு லோகேஷ்வரி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT