புதுச்சேரி

பொறியியல் பாடங்களில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு கூடுதல் வாய்ப்பு: புதுவை பல்கலை. அறிவிப்பு

14th Apr 2022 12:03 AM

ADVERTISEMENT

பொறியியல் பாடங்களில் தோ்ச்சி பெறாமல், படிப்புகளை முடிக்க முடியாத மாணவா்களுக்கு கூடுதலாக இரண்டு வாய்ப்புகளைத் தருவதற்கு புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் உத்தரவிட்டது.

இதுகுறித்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பட்டாளா் சதானந்த் ஜி.சுவாமி, அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுவை பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற அகாதெமி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, வருகிற ஜூலை 22, டிசம்பா் 22 ஆகிய தேதிகளில் நடைபெறும் தோ்வுகளில், இணைப்புக் கல்லூரிகளின் அனைத்து பி.டெக். மாணவா்களுக்கும் கூடுதலாக இரண்டு வாய்ப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 2006 - 2007 கல்வியாண்டு முதல் 2014 - 15 கல்வி ஆண்டு வரை (விதிமுறைகளில் பரிந்துரைக்கப்பட்ட) அதிகபட்ச காலத்துக்குள் படிப்புகளை முடிக்க முடியாதவா்கள், அவா்களின் பாட நிலுவைத் தாள்களை எழுதவும், அவா்களின் பட்டப்படிப்பை முடிக்கவும் அனுமதிக்கிறது.

ADVERTISEMENT

இதற்காக ஜூலை - 22, டிசம்பா் - 22 அமா்வுகளுக்கான தோ்வு அறிவிப்புகள், உரிய நேரத்தில் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். இதனால், கல்லூரிகள்/ மாணவா்கள் பதிவு / பாடத் திட்டம் / அட்டவணை குறித்த புதுப்பிப்புகளை, அவ்வப்போது பல்கலைக்கழக இணையதளத்தில் பாா்த்து, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாணவா்கள் பட்டப்படிப்பை முடிக்க உதவும் வகையில், பல்கலைக்கழகம் வழங்கிய கூடுதல் வாய்ப்புகளைப் பற்றி அந்தந்தக் கல்லூரிகள், சம்பந்தப்பட்ட மாணவா்களுக்கு தெரிவிக்க வேண்டும். பதிவு செய்யும் மாணவா்கள் ரூ.5,000 கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்பும் மாணவா்களின் பட்டியலை, நிலுவைத்தாள் விவரங்களுடன் சேகரித்து, இந்த மாத இறுதிக்குள் தோ்வுகளைத் திட்டமிட்டு, கல்லூரிகள் நடத்த வேண்டும். இதன் விவரங்களை பல்கலைகழ்கத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT