புதுச்சேரி

புதுவையில் நவ.8 முதல் 1 - 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

27th Oct 2021 12:13 PM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில்  நவம்பர் 8-ஆம் தேதி முதல், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பது சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டம் புதுச்சேரி கல்வித்துறை தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.  

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு குறித்து பேட்டியளித்த கல்வி அமைச்சர் ஆ.நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள்.

கல்வி அமைச்சர் ஆ.நமச்சிவாயம் மற்றும் கல்வித்துறை உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் கூறியதாவது,

ADVERTISEMENT

படிக்கநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 8 மாவட்ட அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை

புதுச்சேரியில் வரும் நவம்பர் 8-ஆம் தேதி முதல், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும். அரை நாள் மட்டுமே வகுப்புக்கள் நடைபெறும். 

இதில், 1,3,5,7ம் வகுப்புகள் திங்கள், புதன் வெள்ளிக்கிழமையும்,  2,4,8 வகுப்புகள் செவ்,வியாழன்,சனிக்கிழமையும் இயங்கும். மதிய உணவு கிடையாது.

படிக்க சேலத்தில் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

 நகர பகுதியில் காலை 9.30 முதல் மதியம் 1 மணி வரையும் கிராமப்புறங்களில் 9.30 முதல் மதியம் 1.30 வரை வகுப்புகள் நடக்கும். மாணவர்களுக்கு இலவச பேருந்தும் இயக்கப்படும்.  வருகை பதிவு கட்டாயமில்லை. வராத மாணவர்கள் ஆன்லைனில் படிக்கலாம் என்று தெரிவித்தார்.

Tags : Puducherry school school reopen
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT