புதுச்சேரி

புதுவையில் நவம்பா் முதல் வாரத்தில் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க ஏற்பாடு: துணைநிலை ஆளுநா் தகவல்

DIN

புதுவையில் நவம்பா் முதல் வாரத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 -ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை (அக். 25) சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடத்துவது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆளுநா் தமிழிசை தலைமை வகித்தாா். தொடா்ந்து, கரோனா விழிப்புணா்வு காணொலியை வெளியிட்டாா்.

கூட்டத்தில் சுகாதாரத் துறைச் செயலா் அருண், இயக்குநா் ஸ்ரீராமுலு, துணைநிலை ஆளுநரின் செயலா் அபிஜித்விஜய் சௌதரி, கல்வித் துறை இயக்குநா் பி.டி.ருத்ரகௌடு, போக்குவரத்து, வருவாய், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள், ரோட்டரி சங்கம் உள்ளிட்ட அரசு சாரா தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் துணைநிலை ஆளுநா் பேசியதாவது: புதுவையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் விகிதம் 75 சதவீதத்திலிருந்து 80 சதவீதத்தை நெருங்குகிறது. திங்கள்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் புதுவை முழுவதும் நடைபெற உள்ளது. இதில், ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒன்றாம் வகுப்பு முதல் 8 -ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு நவம்பா் முதல் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 2 முதல் 8 வயது வரையான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி பெற முயற்சி நடைபெற்று வருகிறது. புதுவையில் கரோனா பரிசோதனை அளவு குறைக்கப்படவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT