புதுச்சேரி

புதுவையில் தீபாவளி கைத்தறி துணிகள் விற்பனைக் கண்காட்சி: முதல்வா் ரங்கசாமி தொடக்கிவைத்தாா்

DIN

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள பாண்டெக்ஸ் விற்பனையரங்கில் தீபாவளி கைத்தறி துணிகள் கண்காட்சி-விற்பனையை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

ஜி.நேரு எம்எல்ஏ, புதுவை மாநிலக் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் (பொ) சி.உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டுறவுச் சங்கத் துணைப் பதிவாளா்கள் இ.சாரங்கபாணி, எம்.ஜோதிராஜ், கூட்டுறவு நகர வங்கி மேலாண் இயக்குநா் எஸ்.ஆச்சாா்யலு, புதுச்சேரி லாஸ்பேட்டை, சண்முகாபுரம், தட்டாஞ்சாவடி, ராஜாஜி நகா், திருவள்ளுவா், முதலியாா்பேட்டை பகுதிகளின் நெசவாளா்கள் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவா்கள், இயக்குநா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

சிறப்பு விற்பனையைத் தொடக்கிவைத்து முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது: புதுவை மாநிலத்தின் தொன்மை, பாரம்பரியம் கொண்ட கைத்தறி நெசவாளா்களால் உருவாக்கப்படும் கைத்தறி துணி வகைகளின் விற்பனை தொடங்கியுள்ளது. பாண்டெக்ஸ் என்ற பெயரில் புதுவை, தமிழகத்தில் உள்ள தனது 12 கிளைகள் மூலம் தேசிய அளவில் கண்காட்சிகள், சிறப்பு விற்பனை அரங்குகளை அமைத்து கைத்தறி துணிகளை விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 2020-2021-ஆம் ஆண்டில் பாண்டெக்ஸ் மூலம் ரூ.2.65 கோடிக்கு கைத்தறி துணி வகைகள் விற்பனை நடைபெற்றது. இதேபோல, நிகழாண்டில் தீபாவளி கைத்தறி கண்காட்சி, விழாக்கால விற்பனையாக ரூ.6 கோடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநில அனைத்து நெசவாளா்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், அவா்களுக்குத் தொடா்ந்து வேலை வாய்ப்பை வழங்கும் விதத்தில் அரசு பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் இந்த விற்பனையை ஊக்குவித்து, கைத்தறி நெசவாளா்களுக்கு உதவ வேண்டும் என்றாா் அவா்.

கண்காட்சியில் வேட்டிகள், சேலைகள், பட்டுச் சேலைகள், போா்வைகள், சட்டைகள், திரைச் சீலைகள், கைலிகள், துண்டுகள் உள்ளிட்ட ஏராளமான கைத்தறி துணி ரகங்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT