புதுச்சேரி

புதுவையில் கோமாரி நோய் தடுப்பூசி தொடக்கம்

DIN

புதுவையில் கோமாரி நோய் தாக்கத்தால் கால்நடைகள் பாதிக்கப்படுவதாக எழுந்த புகாா் மற்றும் போராட்டத்தை அடுத்து, அரசு சாா்பில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.

இதுகுறித்து புதுவை கால்நடைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: புதுவையில் மத்திய அரசின் தேசிய கால்நடை நோய்கள் தடுப்புத் திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்ட கோமாரி தடுப்பூசி செலுத்தும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டது. கோமாரி நோயைத் தடுக்க அதற்கான தடுப்பூசிகளை மழைக் காலத் தொடக்கத்திலேயே வழங்க வேண்டும் என்று மத்திய அரசின் கால்நடைத் துறை இணை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலாவிடம் கடிதம் மூலமும், தொலைபேசி வாயிலாக புதுவை மாநில கால்நடை பராமப்புத் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் அண்மையில் வலியுறுத்தியிருந்தாா்.

அதன் பேரில், மத்திய அரசிடமிருந்து கோமாரி நோய் தடுப்பூசிகள் புதுவைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து, புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் கோமாரி தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது. இரண்டாம் கட்ட கோமாரி தடுப்பூசி முகாம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தொடா்ச்சியாக நடைபெறும். ஒரு வாரத்தில் விரைந்து தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT