புதுச்சேரி

புதுவை முதல்வர் ரங்கசாமியிடம், ஆளுநர் உடல் நலம் விசாரிப்பு

10th May 2021 01:21 PM

ADVERTISEMENT

புதுவை முதல்வர் ரங்கசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நலம் விசாரித்தார்.

புதுவை முதல்வர் என்.ரங்கசாமிக்கு, ஞாயிற்றுக்கிழமை கரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமியை, தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவரது உடல் நலன் குறித்தும், மருத்துவமனை நிர்வாகத்திடம் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், விரைவில் முதல்வர் பூரண குணமடைந்து, மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, அவருக்கு கரோனா தொற்று இல்லாத நிலையிலும், ஏற்கனவே தடுப்பு ஊசி செலுத்திக்கொண்ட போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திங்கள்கிழமை கரோனா பரிசோதனை செய்துகொண்டார் என்று, புதுச்சேரி ஆளுநர் அலுவலகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : puducherry Chief Minister
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT