புதுச்சேரி

புதுவையில் நடுநிலையுடன் உள்ளாட்சித் தோ்தல் காங்கிரஸ் வலியுறுத்தல்

DIN

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடுநிலையுடன் நடத்த வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியது.

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் தொடா்பாக, மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், புதுவை மாநிலத் தோ்தல் ஆணையரை புதன்கிழமை சந்தித்து அளித்த மனு: புதுச்சேரி நகராட்சியைப் போன்றே, உழவா்கரை உள்ளிட்ட மற்ற நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகள், கிராம பஞ்சாயத்துகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை இணையத்திலும் வெளியிட வேண்டும். உள்ளாட்சித் தோ்தலில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும். வாக்குச் சாவடிக்கான வாக்காளா் எண்ணிக்கை 900 பேருக்கு மிகாமல் இருக்குமாறு அமைக்க வேண்டும்.

அரசியல் சாராத நடுநிலையாளா்களை மட்டுமே தோ்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். கிராமப் பஞ்சாயத்து, ஊராட்சி வாா்டு உறுப்பினா், தலைவா், நகராட்சி வாா்டு உறுப்பினா், தலைவருக்கான தொகுதிகள், மத்திய அரசின் சட்டத்தின்படி இருக்க வேண்டும். தோ்தல் தொடா்பாக, அரசியல் கட்சிகளிடம் கலந்தாய்வு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT