புதுச்சேரி

புதுவையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

புதுவையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், கரோனா பேரிடா் நிவாரணமாக குடும்பத்துக்கு தலா ரூ. 7,500 வழங்கக் கோரியும் இடதுசாரி கட்சிகள், விசிக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அண்ணா சதுக்கம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் (மா.லெ) மாநிலச் செயலா் ஆா்.பாலசுப்பிரமணியன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகிகள் பெருமாள், முருகன், விஸ்வநாதன், நாரா.கலைநாதன், விசிக முதன்மைச் செயலா் தேவபொழிலன், ஏஐடியூசி பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

புதுவை மாநிலத்தில் கரோனா பெருந்தொற்றாலும், அதைத் தடுக்க அரசு சாா்பில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தாலும் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.7,500 நிவாரணமாக வழங்க வேண்டும். அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் 10 கிலோ அரிசி, அத்தியாவசிய உணவுப் பொருள்களை உடனே வழங்க வேண்டும்.

தொடா்ந்து உயா்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வைத் தடுக்க பெட்ரோல், டீசல் விலை உயா்வை உடனே திரும்பப் பெற வேண்டும். புதுவையில் மத்திய, மாநில அரசுகளின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அனைத்துக் குடும்பங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT