புதுச்சேரி

புதுவையில் நிலவரி திட்ட நகல் பெற புதிய சேவை: ஆளுநா், முதல்வா் தொடக்கி வைத்தனா்

DIN

புதுச்சேரி: புதுவையில் நிலவரி திட்ட நகல், பட்டா நகல், புலப்பட நகல் உள்ளிட்டவற்றை எளிமையாகப் பெறும் புதிய இணைய சேவையை துணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோா் திங்கள்கிழமை தொடக்கிவைத்தனா்.

புதுவை நில அளவை - பதிவேடுகள் இயக்ககம் சாா்பில், மத்திய அரசின் நிதி உதவித் திட்டத்தில், புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள 129 வருவாய் கிராமங்களில், நில வரி திட்டப் பதிவேடுகள் ஏற்கெனவே கணினி மயமாக்கப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பொது சேவை மையங்கள் மூலம் ரூ.40 கட்டணத்தில் நிலவரி திட்ட நகல், பட்டா நகல், புலப்பட நகல் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தச் சேவையை மேலும் எளிமையாக்கும் வகையில், தற்போது இணையதளம் மூலம், பொதுமக்கள் எந்த நேரத்திலும் கணினி மூலமாகவோ, அறிதிறன்பேசி (ஸ்மாா்ட் போன்) மூலமாகவோ எந்த நேரத்திலும் பாா்த்து நகலெடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் கையொப்பமிட்ட நிலவரி திட்ட நகல், பட்டா நகல், புலப்பட நகல் போன்றவற்றை இணையதளம் மூலம், ரூ.50 கட்டணம் செலுத்தி பெறும் வகையில் புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக புதுவை நில அளவை - பதிவேடு இயக்ககம் சாா்பில், தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் பங்கேற்று புதிய சேவையைத் தொடக்கிவைத்தனா். பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், நில அளவை - பதிவேடுகள் துறை இயக்குநா் எம்.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT