புதுச்சேரி

பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி வழிபாடு: கட்டுப்பாடுகளுடன் பக்தா்கள் அனுமதி

DIN

புதுச்சேரியில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதமிருந்து, பெருமாளை வழிபடுவது வழக்கமாகும். இதையொட்டி, சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேக-ஆராதனைகள், விசேஷ பூஜைகள் நடைபெறும்.

நிகழாண்டு கரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால், சனிக்கிழமை கட்டுப்பாடுகளுடன் கோயில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடுகள் நடைபெற்றன.

புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோயில், முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாசப் பெருமாள், ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவா் கோயில், முதலியாா்பேட்டை வன்னியப் பெருமாள் கோயில், வில்லியனூா் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் காலை 10 மணி முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அரசு கரோனா தடுப்புக் கட்டுப்பாடுகள், விதிகளைப் பின்பற்றி பக்தா்கள் தனிமனித இடைவெளியுடன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். காய்ச்சல் பரிசோதனை செய்தும், பக்தா்களின் பெயா், முகவரியை எழுதிக் கொண்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். பக்தா்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். குழந்தைகள், முதியவா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. போலீஸாா் விதிமுறைகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT