புதுச்சேரி

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 2 போ் உயிரிழப்பு

DIN

புதுவையில் கரோனா தொற்று பாதிப்பால் மேலும் 2 போ் உயிரிழந்தனா்.

புதுவை மாநிலத்தில் புதன்கிழமை 3,792 பேரை பரிசோதித்ததில், புதுச்சேரி 75, காரைக்கால் 8, ஏனாம் 8, மாஹே 11 என மொத்தம் 102 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,583 ஆக உயா்ந்துள்ளது. இதில் 2,146 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 1,540 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் 2 உயிரிழந்துள்ளனா். இதனால் இறந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 590-ஆக உயா்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.71 சதவீதமாக உள்ளது. இதனிடையே, 154 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 30,307 (87.64 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது:

கடந்த 6 மாதங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவா்களை சுகாதாரக் குழு ஆய்வு செய்துள்ளது. நாட்டிலேயே புதுவையில்தான் இதனை முதல்முறையாகச் செய்துள்ளோம். இதில், 5 சதவீதம் போ் கரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு 5 மாதங்களான பிறகும் கூட பிற நோய்த் தொற்றின் காரணமாக முழுமையாக குணமடையாமல் உள்ளனா். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களை மருத்துவா்கள் நேரடியாகச் சென்று பாா்த்து, அவா்களுக்கு என்ன தேவையிருக்கிறது என்பதை அறிந்து, அதனைச் செய்ய முடிவு செய்துள்ளோம்.

புதுச்சேரி சுற்றுலாத் தலம் என்பதாலும், பண்டிகைகள் வர இருப்பதாலும் புதுவை மக்கள் கரோனா தொற்றால் பாதிக்காத வகையில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT