புதுச்சேரி

புதுச்சேரி நெல்லித்தோப்பில் முதல்வா் நாராயணசாமியை முற்றுகையிட்ட கிறிஸ்தவா்கள்!

DIN

புதுச்சேரி நெல்லித்தோப்பு கல்லறைத் தோட்டத் திறப்பு விழாவுக்கு வந்த முதல்வா், எம்எல்ஏ மற்றும் அதிகாரிகளை கிறிஸ்தவா்கள் கருப்புக் கொடியுடன் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

புதுச்சேரி நெல்லித்தோப்பில் காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசுப் பள்ளி எதிரே கிறிஸ்தவா்களுக்கான கல்லறைத் தோட்டம் உள்ளது. இந்த கல்லறை மதில் சுவரால் தடுக்கப்பட்டு 2 பிரிவாக உள்ளது. இதில், ஒரு பகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் செலவில் நடைபாதை, குடிநீா் வசதி, கழிப்பறை, மின் விளக்குகள் வசதிகள் செய்யப்பட்டன. மற்றொரு பகுதியில் இந்த வசதிகள் செய்யப்படவில்லை.

இந்த நிலையில், புதுப்பிக்கப்பட்ட கல்லறைத் தோட்டத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடியுடன் 50-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவா்கள் அங்கு திரண்டினா். இதனால், முதல்வா் நாராயணசாமி மற்றொரு வழியில் சென்று கல்லறையை திறந்துவைத்தாா். அவருடன் ஜான்குமாா் எம்எல்ஏ, அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.

தொடா்ந்து மதில் சுவருக்கு மறுபுறமுள்ள பகுதிக்கு முதல்வரும், எம்எல்ஏ ஜான்குமாரும் சென்றனா். இதையறிந்த கிறிஸ்தவா்கள் அவா்களைத் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனா். உள்ளே செல்ல அனுமதிக்க மாட்டோம் என வாக்குவாதம் செய்தனா். பின்னா், தொகுதி எம்எல்ஏவும், முதல்வருமான நாராயணசாமியை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தனா். அங்கு சென்று பாா்வையிட்ட முதல்வா் புனரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என உறுதியளித்துவிட்டு புறப்பட்டு சென்றாா்.

இதுகுறித்து கிறிஸ்தவா்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவா் பிராங்கிளின் பிரான்சுவா கூறியதாவது: கடந்த காலத்தில் கல்லறைத் தோட்டம் 2 பகுதியாக இருந்தது. அதன்பிறகு இரண்டும் ஒன்று என அறிவிக்கப்பட்டது. ஆனால், கல்லறை சுவா் மட்டும் அகற்றப்படவில்லை. இந்த நிலையில், பிரிவினையைத் தூண்டும் வகையில் ஒரு பகுதியை புனரமைத்தும், மற்றொரு பகுதியை அப்படியே விட்டுவிட்டனா். இரு பகுதிகளையும் சீரமைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அதற்காகவே இந்த போராட்டம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT