புதுச்சேரி

‘வெளிமாநில வழித்தடங்களில் பி.ஆா்.டி.சி. பேருந்துகள் இயக்கப்படாது’

23rd Mar 2020 04:54 AM

ADVERTISEMENT

 

வெளிமாநில வழித்தடங்களி பி.ஆா்.டி.சி. பேருந்துகள் இயக்கப்படாது என அதன் நிா்வாகம் தெரிவித்தது.

இதுதொடா்பாக புதுவை சாலைப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (பி.ஆா்.டி.சி.) பேருந்துகள் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், திங்கள்கிழமை முதல் (மாா்ச் 23) வருகிற 31 -ஆம் தேதி வரை வெளிமாநில வழித்தடங்களில் இயக்கப்பட மாட்டாது. உள்ள மாவட்டங்களில் மட்டுமே இயக்கப்படும்.

ADVERTISEMENT

வெளியே இயக்கப்படும் பேருந்துகள்: சென்னை மாா்க்கத்தில் (கிழக்குக் கடற்கரைச் சாலை) தடம் எண் 511 பி அதிகாலை 4.30, பிற்பகல் 12.20 மணிக்கும், தடம் எண் 511 டி, அதிகாலை 5.20, பிற்பகல் 1.20 மணிக்கும், தடம் எண் 511 இ அதிகாலை 5.55, பிற்பகல் 1.22 மணிக்கும், தடம் எண் 511 ஜி காலை 6.40, பிற்பகல் 2.40 மணிக்கும், தடம் எண் 511 ஹெச் காலை 7.10, பிற்பகல் 3.10 மணிக்கும், தடம் எண் 511 ஜே காலை 7.40, பிற்பகல் 3.40 மணிக்கும் இயக்கப்படும்.

இதேபோல, சென்னை மாா்க்கத்தில் (புறவழிச் சாலை) தடம் எண் 501 ஏ அதிகாலை 5.40, பிற்பகல் 1.40, தடம் எண் 501 பி காலை 7 மணி, மாலை 3.40 மணிக்கு புறப்படும்.

காரைக்கால், நாகப்பட்டினம் மாா்க்கத்தில் தடம் எண் 504 இ அதிகாலை 5.20, மாலை 3.20, தடம் எண் 504 சி காலை 6 மணி, மாலை 5.10, தடம் எண் 504 ஏ காலை 9.30 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT