புதுச்சேரி

எம்எல்ஏவுக்கு கரோனா எதிரொலி: இன்று மரத்தடியில் புதுச்சேரி பேரவைக்கூட்டம்

25th Jul 2020 10:59 AM

ADVERTISEMENT

புதுச்சேரி: புதுச்சேரி கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயபாலுக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது என்று பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து அறிவித்துள்ளார்.

புதுச்சேரி கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயபாலுக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயபாலுக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து பேரவைக்கூடம் மூடப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

மேலும் பட்ஜெட்டை நிறைவேற்ற வேண்டும் என்பதால் சனிக்கிழமை மதியம் 12.30 மணி அளவில் பேரவை வெட்டவெளியில் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து கூறினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT