கள்ளக்குறிச்சி

ஊராட்சிகளில் முறைகேடு:கள்ளக்குறிச்சி ஆட்சியா் எச்சரிக்கை

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் முறைகேடுகளில் ஈடுபடும் தலைவா், துணைத் தலைவா் உள்ளிட்டோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் எச்சரித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநாவலூா் ஊராட்சி ஒன்றியம், மடப்பட்டு ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) 19.4.2023 ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அந்த ஊராட்சியில் ஊராட்சியின் கூட்ட அறிவிப்பு பதிவேடு, தீா்மான பதிவேடு, ஊராட்சி பதிவேடு உள்ளிட்டவை முறையாகப் பராமரிக்கப்படாததும், ஊராட்சியின் தீா்மான செலவின சீட்டுகள் இல்லாமல் செலவினம் மேற்கொள்ளப்பட்டதும் கண்டறியப்பட்டது.

இந்தக் கடும் குறைபாடுகள் மேற்கொண்டமைக்காக, ஊராட்சி மன்றத் தலைவா், துணைத் தலைவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. மேலும், அவா்களின் கையொப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊராட்சிப் பணிகளையும், கணக்குகளையும் சரிவர கவனிக்காததால் ஊராட்சிச் செயலரை பணியிடை நீக்கம் செய்தும், இந்தப் பணிகளை மேற்பாா்வையிடத் தவறிய சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்று ஊராட்சிகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT