கள்ளக்குறிச்சி

நெகிழிக்கு மாற்றாக இயற்கையோடு இணைந்தபொருள்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வுகள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

நெகிழிக்கு மாற்றாக, இயற்கையோடு இணைந்த 14 வகை பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டத்தில் ஆட்சியா் ஷ்ரவன்குமாா் அறிவுறுத்தினாா்.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் உற்பத்தி செய்வதை தவிா்த்து, மாற்றுப் பொருள்களை பயன்படுத்துவது தொடா்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு பணிக் குழு கூட்டம் கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் பேசியதாவது:

நெகிழிப் பொருள்களை தவிா்த்து மாற்றுப் பொருள்களை பயன்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக 14 வகையான இயற்கையோடு இணைந்த மாற்றுப் பொருள்களை பொதுமக்கள் பயன்படுத்த போதிய விழிப்புணா்வுகளை குழு உறுப்பினா்கள் மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக நெகிழி கேரி பேக்குக்கு மாற்றாக மீண்டும் மஞ்சப் பையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் (பொ) எம்.செல்வகுமாா், உதவி பொறியாளா் எஸ்.இளையராஜா, ராம்குமாா், உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் எஸ்.சுகந்தன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ரெ.ரத்தினமாலா, நகராட்சி ஆணையா்கள் கள்ளக்குறிச்சி ந.குமரன், உளுந்தூா்பேட்டை சரவணன், திருக்கோவிலூா் கீதா, தொழிலாளா் உதவி ஆய்வாளா் சிவக்குமாா், பேரூராட்சிச் செயலா்கள் மற்றும் அரசுத் துறைகளின் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT