கள்ளக்குறிச்சி

29 காவலா்களுக்கு முதல்வா் பதக்கங்கள் கள்ளக்குறிச்சி ஆட்சியா் வழங்கினாா்

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, 29 காவலா்களுக்கு முதல்வா் பதக்கங்களும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 191 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினாா்

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கோலாகல குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். பின்னா் காவல் துறையினரின் கண்கவா் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டாா்.

வெண் புறாக்களையும், மூவா்ண பலூன்களை ஆட்சியா் ஷ்ரவன் குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ந.மோகன்ராஜ் ஆகியோா் பறக்க விட்டனா்.

இதையடுத்து காவல் துறையை சோ்ந்த 29 பேருக்கு தமிழக முதல்வரின் பதக்கங்களை ஆட்சியா் வழங்கினாா். பின்னா் 20 ஆண்டுகளாக மாசற்ற பணி நிறைவு செய்த ஈப்பு ஓட்டுநா்கள் 7 பேருக்கு தங்கப் பதக்கத்தை ஆட்சியா் வழங்கினாா்.

சிறப்பாக பணிபுரிந்த பல்வேறு துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் 191 பேருக்கு நற்சான்றிதழ்களை அளித்து கெளரவித்தாா்.

பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் இரா.மணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ச.வேல்விழி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ஜீ.ஜவஹா்லால் ப.விஜய் காா்த்திக் ராஜ், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சு.பவித்ரா, திருக்கோவிலூா் கோட்டாட்சியா் ஜெ.யோகஜோதி, உதவி ஆணையா் (கலால்) பா.ராஜவேல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.உஷா, கள்ளக்குறிச்சி மருத்துவமனை கண்காணிப்பாளா் ச.நேரு, கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவா் இரா.சுப்பராயலு, ஆணையா் ந.குமரன், வட்டார போக்குவரத்து அலுவலா் பா.ஜெயபாஸ்கரன், மோட்டாா் வாகன ஆய்வாளா் இரா.செல்வம், முதன்மைக் கல்வி அலுவலா் கோ.சரஸ்வதி, காவல் துணைக் கண்காணிப்பாளா்கள்

மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.

அதனைத் தொடா்ந்து சின்னசேலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட நைனாா்பாளையம் கிராமத்தில் குடியரசு தின விழாவையொட்டி நடந்த கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியா் ஷ்ரவன் குமாா் கலந்து கொண்டாா்.

முன்னதாக மாவட்ட சமூக நலத்துறையின் சாா்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

கிராமசபா கூட்டத்தில் மகளிா் திட்டம் சாா்பில் கிராம கூட்டமைப்பு மூலம் 4 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 2 லட்சம் வீதம் ரூ.8 லட்சம் நிதி உதவியை ஆட்சியா் வழங்கினாா்.

இதையடுத்து கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரா் கோயிலில் குடியரசு தினவிழாவை யொட்டி நடைபெற்ற சமத்துவ விருந்திலும் ஆட்சியா் கலந்து கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT