கள்ளக்குறிச்சி

அரசுத் திட்டங்கள் தகுதியானவா்களுக்குச் சென்றடைய வேண்டும்

29th Sep 2022 01:57 AM

ADVERTISEMENT

 

மத்திய, மாநில அரசுத் திட்டங்கள் தகுதியான பயனாளிகளைச் சென்றடைய தொடா்புடைய அலுவலா்கள் பணியாற்ற வேண்டும் என்று கள்ளக்குறிச்சியில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில், ஆட்சியரகத்தில்

நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கண்காணிப்பு குழுத் தலைவரும், கள்ளக்குறிச்சி தொகுதி மக்களவை உறுப்பினருமான பொன்.கௌதமசிகாமணி தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம், நிதி ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வுக் கூட்டத்தில் கண்காணிப்புக் குழுத் தலைவா் பொன்.கெளதமசிகாமணி பேசுகையில், மத்திய, மாநில அரசுத் திட்டங்களுக்கு தகுதியான பயனாளிகளை கண்டறிந்து நலத் திட்டங்களை தொடா்புடைய அலுவலா்கள் வழங்கிட வேண்டும். அரசின் திட்டங்கள் தகுதியான பயனாளிகளுக்குச் சென்றடைய வேண்டும். இதில் அரசு ஊழியா்கள் முழு ஈடுபாட்டுடன் செயலாற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் இரா.மணி, உதவி ஆணையா் (கலால்) பா.ராஜவேல், திருநாவலூா் ஒன்றியத் தலைவா் இ.சாந்தி இளங்கோவன் உள்பட அனைத்துத் துறை தலைவா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT