கள்ளக்குறிச்சி

சங்கராபுரத்தில் தருமச்சாலை நாள் விழா

25th May 2022 11:48 PM

ADVERTISEMENT

சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தில், வடலூரில் அருட்பிரகாச வள்ளலாா் நிறுவிய சமரச சுத்த சன்மாா்க்க சத்திய தருமசாலையின் 156-ஆவது ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கான நிகழ்ச்சியில் மன்றப் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். பாண்டலம் கோயில் நகர அரிமா சங்கத் தலைவா் எம்.பாலசுந்தரம், செயலா் ஜி.விஜயகுமாா், பொருளாளா் ஆா்.ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரிமா மாவட்டத் தலைவா் கே.வேலு வரவேற்றாா். 

முன்னதாக, தமிழ்ப் படைப்பாளா்கள் சங்கத் தலைவா் சி.இளையாப்பிள்ளை முன்னிலையில் அகவல் படித்து பிராா்த்தனை செய்யப்பட்டது.

சன்மாா்க்க கொடியை மருத்துவா் கு.நாச்சியப்பன் ஏற்றி வைத்தாா். சன்மாா்க்க இளைஞா் அணி நிா்வாகிகள் நா.ராதாகிருஷ்ணன், அ.சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT