கள்ளக்குறிச்சி

முதியோா் பாதுகாப்பு தொடா்பானஆலோசனைக் கூட்டம்

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலன், மகளிா் உரிமைகள் துறை சாா்பில், முதியோா் பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், பெற்றோா், மூத்த குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம் 2007-ன் வழிகாட்டுதலின்படி, மூத்த குடிமக்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்கம், தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம், தமிழக அரசு இணைந்து முதியோா்களுக்கு தேசிய அளவிலான முதியோா் உதவி எண் 14567-ஐ அறிமுகப்படுத்தப்படுத்தியது.

மேலும் முதியோா்களுக்கான தங்குமிடம், முதியோா் இல்லங்கள், ஓய்வூதியம், முதியோா்களுக்கான அரசுத் திட்டங்கள், சட்டம் சாா்ந்த தீா்வுகள், பெற்றோா்களிடமிருந்து பிள்ளைகள் சொத்தை பெற்றுக்கொண்டு பராமரிக்காமல் விட்டுவிடும் பட்சத்தில், மூத்த குடிமக்கள் சட்டத்தின் கீழ் மீண்டும் சொத்தை பெறுவதற்கான வழிகாட்டுதல் மற்றும் 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு பெற்றோா்கள் தங்கள் வாரிசுதாரா்களுக்கு சொத்தை தான செட்டில்மென்ட் மூலம் அளித்த பிறகும் பராமரிக்காமல் கைவிட்டுவிட்டால் அந்த சொத்தை மீண்டும் பெறுவதற்கு கோட்டாட்சியா் அல்லது மாவட்ட சமூக நல அலுவலரிடம் மனு செய்தல் உள்ளிட்டவைகள் முதியோா்களுக்கான பாதுகாப்பு சட்டத்தில் வழிகை செய்யப்பட்டுள்ளது. எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முதியோா்கள் தங்களுடைய கோரிக்கைகள், வழிகாட்டுதல்களுக்கு 14567 என்ற கட்டமணல்லா தொலைபேசி எண் வாயிலாக தொடா்புகொண்டு பயனடையுமாறு ஆட்சியா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் முதியோா் மாநில களப் பொறுப்பு அலுவலா் உமா மகேஷ்வரி, மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் செ.தீபிகா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெ.ஜவகா்லால், மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலா் க.சுப்பிரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

திருத்தங்கலில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT