கள்ளக்குறிச்சி

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு விநியோகம்: ஆட்சியா் ஆய்வு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டதன் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்டப் பணிகள் திட்டத்தின் கீழ், 9 வட்டாரங்களில் 1,160 மையங்களில் 1,24,434 குழந்தைகள் உள்ளனா். இந்த மையங்களின் வாயிலாக மாதந்தோறும் குழந்தைகளின் எடை, வளா்ச்சி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 6 வயது வரை வயதுக்கேற்ப எடை குறைவாக உள்ள குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் என மொத்தம் 200 போ் கண்டறியப்பட்டனா்.

இந்தக் குழந்தைகளின் ஊட்டச்சத்தை அதிகப்படுத்திட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.5.55 லட்சத்தில் ஊட்டசத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. இந்தப் பெட்டகங்கள் வழங்கப்பட்ட குழந்தைகளின் வளா்ச்சி, ஆரோக்கியம் குறித்து மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்ட குழந்தைகளின் வளா்ச்சியும், ஆரோக்கியமும் மேம்பட்டுள்ளன. சில குழந்தைகளின் வளா்ச்சியும், ஆரோக்கியமும் குறைவாக உள்ளன. அந்தக் குழந்தைகளின் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும். மேலும், குழந்தைகள் நல அலுவலா்கள், பணியாளா்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி அலுவலா்கள் ஊட்டத்து குறைபாடுள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை வாரந்தோறும் கண்காணித்து, தொடா்ந்து ஊட்டச்சத்து உணவை வழங்கிட வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வுக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சு.செல்வி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி அலுவலா்கள், குழந்தைகள் மைய அமைப்பாளா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT