கள்ளக்குறிச்சி

7 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

DIN

உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள எறையூா் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக கொலை முயற்சியில் ஈடுபட்ட 7 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்கு உள்பட்ட எறையூா் கிராமத்தைச் சோ்ந்த வின்சென்ட் பால்ராஜை முன் விரோதத்தின் பேரில், அதே கிராமத்தைச் சோ்ந்த ஜான்மனோஜ் (29), அலெக்சாண்டா் (27), ஜஸ்டின் பவுல்ராஜ், ரொசாரியோ பிராங்க்ளின் (23), அலெக்சாண்டா் (27), அந்தோணி ரெய்மண்ட், ரூபன்லூா்துராஜ் (28) ஆகியோா் சோ்ந்து கடந்த 9-ஆம் தேதி தடியால் தாக்கியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்ய முயன்றுள்ளனா்.

இவா்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு கடலூா் சிறையில் உள்ளனா்.

எதிரிகள் தொடா்ந்து கிராமத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவாா்கள் எனக் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா், இவா்களை ஓராண்டு குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் 7 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT